யானை சவாரி
ராமதுரைக்கு ஏனோ அன்று பழைய நிகழ்ச்சிகளின் நினைவு அதிகமாக இருந்தது. கடந்த ஐந்து வருடங்களாக மனைவி சுமதியின் மறைவுக்குப் பின் தனிமை அவரை மிகவும் வாட்டியது. ஒரே பெண் மஞ்சு. அவள் தன்னுடன் வந்து தங்கி விடும்படி சொன்னாலும் அவருக்கு முடியவில்லை. இந்த வீட்டில் இருப்பதால் சுமதியுடன் வாழ்வது போன்ற எண்ணம் ஏற்படுவதாகத் தோன்றும். அவ்வப்போது சென்று சில நாள் தங்கி வருவார். அவரது பேத்தி அனுஷாவுக்கு அவரை மிகவும் பிடிக்கும். " பாட்டி ஏன் தாத்தா நம்மை விட்டு போயிட்டாங்க. எனக்கு அவங்களைப் பார்க்கணுமே" என்பாள் கண்கலங்க. இரண்டு நாட்களாக வார இறுதி விடுமுறைக்கு வந்து விட்டுப் போன பெண், பேத்தியின் நினைவு மனதை வாட்டியது. சுமதியின் நினைவு வந்தால் அவள் புகைப்படத்தை பார்த்தபடி ஏதாவது பேசிக் கொண்டிருப்பார். அன்றும் அதுபோல் பார்த்தபோது, அவர் அனுஷாவை முதுகில் வைத்து யானை ஓட்டிய புகைப்படத்தைப் பார்த்தார். அன்றைய சம்பவம் மனதில் வந்தது. "பாட்டி இங்க வந்து பார்"என்று கூப்பிட்ட பேத்தி அனுஷாவின் குரலுக்கு "இதோ வரேன்" என்றபடியே தன் கைவேலை யைப் பாதியில் நிறுத்தி விட்டு வந்தாள் சுமதி. "எதற்க...